சேலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது பெண் ஒருவர் மயங்கி விழுந்தார்.
புது ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சம்பள உயர்வு உட்பட பல்வேறு சலுகைகள் மறுக்கப்பட்டதாக கூறி, மெழுகுவர்த்தி ஏந்தி டெலிபோன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். அப்போது பெண் தொழிலாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.