திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு , கோழி பலியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் உள்ளிட்ட பலர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
உயர்நீதி மன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நீதிபதி நிஷாபானு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஆனால் மற்றொரு நீதிபதியான ஸ்ரீமதி, மனுதாரர்களான சோசிலண்ணன், பரமசிவம், ராமலிங்கம் ஆகியோரது மனுக்களை விசாரணைக்கு அனுமதித்தார்.
ஒரே வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்ததால் விசாரணை மூன்றாவது நீதிபதியான விஜயகுமாருக்கு மாற்றப்பட்டது.
அப்போது ஆஜரான வழக்கறிஞர், திருப்பரங்குன்றத்தில் பலியிடுவது, மலையின் புனிதத்தை கெடுக்கும் செயல் உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தார்.
மனுதாரர்களின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி விஜயகுமார், விசாரணையை வரும் 5ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.