திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலை தடுப்பின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன உதிரிப் பாகங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, முந்தி செல்ல முயன்ற மற்றொரு லாரி மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதேபோல், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில், இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், சிறுவன் படுகாயம் அடைந்தான்.