திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 17 வயது சிறுவனைக் கடத்தி சென்று அடித்துத் துன்புறுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
முனிரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற மாணவன், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது வழிமறித்த 2 பேர் வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் அவரை அமர வைத்தனர்.
பின்னர் சிறுவனை வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற இருவரும் மாணவனின் சகோதரி பற்றிய விவரங்களை கேட்டுள்ளனர்.
இதற்கு முகேஷ் எதிர்ப்பு தெரிவித்ததால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பி சென்றனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோஷ், சிம்பு ஆகிய இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.