நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
டார்லிங்டன் பகுதியில் தேயிலை தூள் சேமிக்கும் கிடங்கு உள்ளது. 9 டன் தேயிலை தூள் மூட்டைகளை லாரி மூலம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று மேட்டுப்பாளையம் புறப்பட்டது.
ஆடர்லி பகுதியில் சென்ற போது லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.