ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் கட்டுமானப் பணிகளுக்கு மண் எடுப்பதற்குக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள ஒரு தனியார் நிறுவனம், கட்டுமானப் பணிகளுக்காக வெளியில் இருந்து மண் கொண்டு வராமல், அங்கேயே இயந்திரங்கள் மூலம் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டது.
இதைக் கண்ட சாத்தக்கோன்வலசை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அந்த இடத்தில் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.