சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அங்கன்வாடி மையத்திற்குச் சென்ற 4 வயது சிறுமி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவூர் அருகேயுள்ள குண்டாக்கல்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் நான்கு வயது மகள் கடந்த முப்பதாம் தேதி அங்கன்வாடி மையத்திற்குச் சென்றுள்ளார்.
ஆனால், வெகு நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.