தென்காசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த சிமெண்ட் கலசம் பெயர்ந்து விழுந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் முறையாகப் பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படும் நிலையில் கும்பாபிஷேக விழா அண்மையில் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில் கோயிலின் ராஜகோபுரத்தில் உள்ள ஒரு சிறிய சிமெண்ட் கலசமானது தனியாகப் பெயர்ந்து விழுந்தது.
நல்வாய்ப்பாகக் கோபுரத்தின் கீழ் பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
முறையாகப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததே இது போன்ற நிகழ்வுக்குக் காரணம் எனவும் , கட்டுமானத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.