இமாச்சல பிரதேசம் மண்டியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மண்டி மாவட்டத்தில் பண்டோ அணை அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சாலையில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீண்டும் அதே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான பாறைகள் மற்றும் மண் விழுந்துள்ளதால் சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.