கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எலச்சிபாளையம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் புத்தகப் பைகளை ஆசிரியர் சோதனை செய்தபோது, அவற்றில் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வந்த போலீசார் பள்ளிக்கு அருகில் இருந்த மளிகைக் கடையில் சோதனை செய்தனர்.
அப்போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 141 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.