பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்ற தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்குத் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பீகார் வரைவு வாக்காளர் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இந்த நிலையில், பட்டியலில் தனது பெயர் இடம் பெறவில்லை என ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் சேர்க்கப்படவில்லை எனத் தேஜஸ்வி யாதவ் கூறுவது உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் வரிசை எண் 416-ல் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.