உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்தியா தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பேசிய அவர், இந்தியா 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக வெகு விரைவில் உயர உள்ளதாகத் தெரிவித்தார்.
விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் சிறு குறு தொழிலாளர்களின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகக் கூறிய பிரதமர் மோடி, உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்தியா தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிப்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனக் கூறினார்.