ஆடிப்பெருக்கு நாளில் நீர்வளம் காப்போம் பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
அழிவின் விளிம்பில் இருக்கும் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடமும், ஆளும் அரசிடமும் எடுத்துக் கூறும் கடமையும், பொறுப்பும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நீர்வளம் காப்போம் என்ற பெயரில் கேட்பாரற்று கிடக்கும் நதிகள் மற்றும் நீர்நிலைகளைக் காக்கும் பிரசாரத்தைத் தமிழக பாஜக முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆடிப்பெருக்கு திருநாளில் நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈரோடு சங்கமேஸ்வரர் முக்கூடலில் ஆரத்தி எடுத்து பிரசாரத்தைத் தொடக்கி வைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து தமிழக பாஜகவின் 67 அமைப்பு மாவட்டங்களிலும் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகளைப் பின்வரும் நாட்களில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.