பன்முகக் கலைஞரான மதன் பாப் உடல்நலக்குறைவால் காலமானார் எனும் செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மிமிக்ரி, நகைச்சுவை, திரைப்பட குணச்சித்திரங்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என திரையுலகிலும் தொலைக்காட்சி உலகிலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் என தெரிவித்துள்ளார்.
தனது தனித்துவமான சிரிப்பாலும் நடிப்புத் திறமையாலும் மக்களை சிரிக்க வைத்த ஒரு திரைக் கலைஞரின் மறைவு, திரையுலகிற்கு மட்டுமன்றி அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்தித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.