ட்ரோன் பரிமாற்றம் தொடர்பாக பாகிஸ்தான் விமானப்படை தளபதி மற்றும் வங்கதேச ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உளவுத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், வங்கதேச தலைநகர் டாக்காவில், பாகிஸ்தான் விமானப்படை தளபதி ஜாகீர் அகமது பாபர் மற்றும் வங்கதேச ஆயுதப்படையின் உயர்மட்ட அதிகாரிகள் இடையே கடந்த ஏப்ரல் 15 முதல் 19ஆம் தேதி வரை ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள் பற்றியும், விமானப்படையில் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ட்ரோன் தயாரிப்பு, தகவல் தொடர்பு, விண்வெளி நடவடிக்கைகள், சைபர் போர் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் – வங்கதேசம் இடையே நடந்த ரகசிய ராணுவ சந்திப்பில், மூன்றாவது நபராக சீனா பங்கேற்று ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகசிய சந்திப்பின்போது வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீனை நீக்குவது பற்றியும், அவருக்கு பதில் ராணுவ பின்புலம் கொண்ட நபரை நியமிக்க பாகிஸ்தான் விரும்பியதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.