திமுக எம்பி மற்றம் எம்எல்ஏ இடையேயான மோதல் சம்பவம் எதிரொலியாக, தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக ஆண்டிபட்டியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனும், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜனும் மேடையில் நேருக்கு நேர் மதிக்கொண்டனர்.
இருவரும் ஒருவரையொருவர் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆண்டிபட்டி நகரில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
ஆண்டிபட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபடும் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனை ஒருமையில் பேசிய ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கட்சியினரை மதிக்காத அவர் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ஒட்டியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.