காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் மது போதையில் பணியாற்றிய முதல்நிலை வீரருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் காமராஜ் என்பவர் கடந்த சில நாட்களாக மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே, மது போதையில் பணிக்கு வந்த காமராஜை உயரதிகாரிகள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். தீயணைப்பு வாகனத்திலேயே காமராஜை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.