ஆடிப்பெருக்கு தினமான இன்று, கொங்கு நாட்டுத் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான, ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வழிபாடு செய்தார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அதைத்தொடர்ந்து, காவிரி ஆற்றில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு சிறப்பு ஆராதனை நிகழ்விலும் கலந்துகொண்டேன். டெல்டா விவசாயிகளின் ஜீவ ஆதாரமாக இருக்கும் காவிரித்தாய்க்கு நன்றி கூறி வழிபட்டேன்.
மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ, அருள்புரிய வேண்டுமென்று இறைவன் ஸ்ரீ சங்கமேஸ்வரரை வேண்டினேன் என தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஸ்வச் பாரத்’ நிகழ்வையும் துவக்கி வைத்தார். ஆலயத்தூய்மையே இறைவனுக்கு நாம் செய்யும் பெரும் தொண்டாகக் கருதுவதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.