பவானி சாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மாயமான கல்லூரி மாணவரை, தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோட்டில் உள்ள மணல் கரடு என்ற நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஏரியில் வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது காற்றின் காரணமாக படகு தண்ணீரில் மூழ்கியது. இந்த விபத்தில் கரட்டூரை சேர்ந்த சக்தி என்பவர் நீந்தி கரைக்கு வந்த நிலையில், சுரேஷ் என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தண்ணீரில் மாயமான மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரை, தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.