தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
தூத்துக்குடியில் முதன் முதலாக 1992ஆம் ஆண்டு ஆயிரத்து 350 மீட்டர் ஓடுதளம் கொண்ட விமான நிலையம் தொடங்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தூத்துக்குடி பெரிய தொழில் நகரமாக மாறியதால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி 672 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 452 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்து கட்டி முடிக்கப்பட்ட புதிய விமான நிலையத்தை கடந்த 26ஆம் தேதி பிரதமர் மோடி நேரில் வருகை தந்து திறந்து வைத்தார்.
விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்திலிருந்து இன்று முதல் விமான சேவை தொடங்கியது.