தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவில்பாறை மலை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் 11 வயது மகளை, எதிர்வீட்டில் வசிக்கும் முத்தையா என்பவர், தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென குற்றஞ்சாட்டியுள்ள சிறுமியின் பெற்றோர், தனது உறவினர்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.