விபத்தில் சிக்கும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுவதாக கன்னியாகுமரியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் மார்த்தாண்டம் போக்குவரத்து வரத்து போலீசார் இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி வெட்டுவெந்நி Ymca வளாகத்தில் நடைபெற்றது மார்த்தாண்டம் காவல் துறை ஆய்வாளர் வேளாங்கண்ணி போக்குவரத்து துறை உதவி ஆய்வாளர் செல்ல சுவாமி உட்பட பல காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 250 க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களை சேர்த்து 300 பேர் உள்ளதாகவும் தினம் தோறும் அனைத்து நேரங்களிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அரசு பேருந்து முதல் பல வாகனங்கள் ஆம்புலன்ஸ் வந்தால் வழி விடுவதில்லை அவர்களும் அதே வேகத்தில் வருகின்றனர் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்தனர்.
தங்களுக்கு காப்பீடோ அரசின் சலுகைகளோ கிடையாது இது எதுவுமே இல்லாமல் ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகள் விபத்தில் சிக்கியவர்களை மருந்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும் அவர்கள் கூறினர்.