சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும் , பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு தினத்தையொட்டி ஈரோடு ஓடாநிலை பகுதியிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரும், தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும் , பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி என தெரிவித்தார்.