ரசிகர்களின் அன்பை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
சினிமாத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித் குமார், தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், எந்த பின்புலமோ, யாருடைய சிபாரிசோ இல்லாமல் தான் சினிமா துறைக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ள அஜித் குமார், எண்ணில் அடங்காத வெற்றிகளையும், தோல்விகளையும் சினிமா துறையில் பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு முறை தனது வெற்றி மீது சந்தேகம் கொள்ளும்போதும் ரசிகர்களின் அன்பும், ஆதரவுமே தன்னை மீண்டு வர செய்துள்ளதாகவும், ரசிகர்களின் அன்புக்கு என்றும் உண்மையாகவும், உறுதுணையாகவும் இருப்பேன் என்றும் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் தனது ரசிகர்கள் மட்டுமே என தெரிவித்துள்ள அவர், ரசிகர்களின் அன்பை தனது சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
33 ஆண்டுகால சினிமாத் துறையில் தனக்கு ஊக்கமளித்து, உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள நடிகர் அஜித் குமார், தனக்கு பத்ம பூஷன் விருது வழங்கி தனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்திய குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு அதற்காக நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.