நெல்லை அருகே சாலை விபத்தில் சிக்கிய முதியவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
நெல்லையில் இருந்து கோவில்பட்டி நோக்கி காரில் வந்துகொண்டிருந்த முதியவர், சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், காயமடைந்த முதியவரை மீட்டு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். பின்னர் ஆட்டோ மூலம் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.