ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பகுதியில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிர்வாகியான யுவராஜை கைது செய்யக் கோரி கொமதேக நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கொமதேக மற்றும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் இருதரப்பினர் இடையேயான மோதலை தடுத்து நிறுத்தினர்.
தீரன் சின்னமலை பேரவையின் நிர்வாகி யுவராஜ் மீது நடவடிக்கை எடுக்ககோரி கொமதேக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொமதேகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் காவல்துறை உயரதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.