வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமலை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஸ்ரீ முத்துமலை முருகன் கோயிலில் ஆடிப்பெருக்கையொட்டி, முருகப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து, வள்ளி, தெய்வானையுடன் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்கள் அழகு குத்தியும், விருதமிருந்தும் தங்களுடைய நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.