மதுரை மாவட்டம், அப்பன் திருப்பதி பகுதியில் 5 வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி நடைபெற்றது.
அப்பன் திருப்பதி பகுதியில் உள்ள வல்லபா வித்யாலயா பள்ளியில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் கனடா, அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்றனர்.
4 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியைச் சக்தி குழுமத் தலைவர் மாணிக்கம், தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக மூன்று லட்ச ரூபாயும், 2ம் பரிசாக ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும் எனப் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.