கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அகரம் பவுண்டேசன் விழாவில் மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், சனாதனம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். கமலின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக மூத்த தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டினார். மேலும், மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன் இன்னும் பொறுப்பாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.