விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நூறு நாள் வேலைக்குக் குறைவான ஊதியம் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினால் பணி மேற்பார்வையாளர் ஆபாச வார்த்தைகளில் திட்டுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
செஞ்சி அடுத்த மேல்ஒலக்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் நூறு நாள் வேலையில், பணியாளர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து கேள்வி எழுப்பும் பணியாளர்களை, மேற்பார்வையாளர் மருவரசி சாதிப் பெயரைக் கூறி தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மருவரசி மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மாவட்ட நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.