உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோயிலில் சவான் மாத கடைசி திங்கட்கிழமையை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சிவபெருமானின் முக்கிய ஆலயங்களில் ஒன்றான வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் சவான் மாத கடைசி திங்கட்கிழமையை ஒட்டி காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.