தமிழகச் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் மனங்களைப் பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சி குழுவினர் கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மாநிலக் கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை முழுவீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பயணித்து மக்களின் மனங்களைப் பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சி பிரம்மாண்ட கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது.
அதன்படி சென்னையிலிருந்து பணியைத் தொடங்கிய தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு குழுவினர், தற்போது, திருச்சி, மதுரை மாவட்டங்களில் மக்கள் கருத்துகளைக் கேட்டறிகின்றனர்.