சுதந்திர தினத்தை ஒட்டி குஜராத்தில் மூவர்ணக் கொடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் வரும் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், பொது இடங்களில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக பல்வேறு அளவுகளில் தேசியக் கொடி தயாரிக்கப்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலம் சூரத்தில் மூவர்ணக் கொடிகளைத் தயாரிக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.