லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அனிருத் சந்திரசேகர் இணை சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது.
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லெக்சிங்டன் நகரில் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
இத்தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ராம்குமார், அனிருத் ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சீன தைபே ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.