ஒடிசாவில் மோட்டார் வாகன ஆய்வாளரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 44 வீட்டு மனைகள், ஒரு கோடிய 34 வைப்புத் தொகை, ஒரு கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பவுத் மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றும் கோலப் சந்திர ஹன்ஸ்டா என்பவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் 44 வீட்டு மனைகள், ஒரு கோடியே 34 லட்சம் வைப்புத் தொகை, ஒரு கிலோ தங்க நகைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து சொத்துகளையும் மதிப்பீடு செய்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.