மத்தியப் பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த பெண், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவனரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்ரையீஸ். இஸ்லாமியரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியஸ்ரீ என்பவரை ஒருதலையாகக் காதலித்து வந்தார்.
மேலும், தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், அதற்கு முன்பாக இஸ்லாமிய மதத்துக்கு மாற வேண்டும் என்றும் அவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஆனால், இதற்கெல்லாம் பாக்கிய ஸ்ரீ சம்மதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த ஷேக்ரையீஸ், பாக்கிய ஸ்ரீ வீட்டுக்குச் சென்று தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
மதம் மாறும்படியும் வற்புறுத்தியுள்ளார். அப்போதும் பாக்கிய ஸ்ரீ உடன்பட மறுக்கவே, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார் பாக்கியஸ்ரீயின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய ஷேக்ரையீஸை அவர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.