திருப்பத்தூரில் பள்ளி மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர்.
திருப்பத்தூரில் பள்ளி கிணற்றில் 11-ம் வகுப்பு மாணவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மாணவரின் உறவினர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டுத் திருப்பத்தூரில் ரயிலை மறித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், போராட்டம் நடத்திய பெண்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர்.