உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும், சுற்றுலாத் தலங்களை மூடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
உதகை, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. உதகையில் மழை காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.