நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், அரசு பணத்தில், அரசு ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் பெயரை வைப்பது தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட பிம்பத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் திட்டம் விளம்பரப்படுத்தப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தனியார் தன்னார்வலர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், மக்களிடம் இருந்து பெறப்படும் மருத்துவ ரீதியான தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், இது உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டுமெனவும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை நிரந்தரமாக அழிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.