அடுத்து 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து அதிகரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு அவர் ஜூலை இறுதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்த நிலையில் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாத நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என வலியுறுத்திருந்தார்.
அமெரிக்கா – இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாததால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தார். ஆனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போரை இந்தியா ஊக்குவிப்பதாக அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை தாம் விரும்பவில்லை என்று கூறினார். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து அதிகரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.