சென்னை கே.கே.நகரில் உள்ள பிடாரி காளியம்மன் கோயிலில், லாக்கரை உடைத்து 7 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சிறுவன் ஒருவன் நடமாடியது தெரியவந்தது. வடபழனி அருகே அந்த சிறுவனை மடக்கிப்பிடித்த போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.