அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு திமுகவினர் இனிப்பு வழங்கிது சுர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி ஊராட்சியில் உள்ள எடப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பொதுமக்கள் மனுக்களை அளிக்க நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர்.
அப்போது அங்கு வந்த திமுகவினர், மாதவரம் திமுக எம்எல்ஏ சுதர்சனம் கொடுத்து அனுப்பிய சுவீட் பாக்ஸை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.அப்போது 5 ஆண்டுகளாக சாலை வசதியோ, மின் விளக்கு வசதியோ தங்கள் பகுதியில் இல்லை என நேதாஜி நகர் பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு சுவீட்ஸ் பாக்ஸ் வழங்கிய திமுகவினர் மனுக்களை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நழுவிச் சென்றனர்.