இணையவழி சூதாட்ட செயலிகள் தொடர்பான பண முறைகேடு வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
இணையவழி சூதாட்ட செயலிகள், சட்டவிரோத சூதாட்டம் மற்றும் பந்தயம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக ஈட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதுதொடர்பாக அதன் விளம்பரங்களில் பங்கேற்ற நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகைகள் லக்ஷ்மி மஞ்சு, நிதி அகா்வால், பிரணிதா சுபாஷ் உள்பட சுமாா் 29 போ் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை அளித்த சம்மனை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள அமலாகத்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆஜரானார்.