கணபதியைத் தொழுதால் காரியம் கைகூடும் என்பது அருளாளர்கள் வாக்கு, மண்ணால் செய்த சிலையை நீரில் கரைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வோம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
நடப்பாண்டு வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளதால், சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் திருச்சியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைக் கைவினை கலைஞர்கள் வடிவமைத்து வருகின்றனர்.
நீர்நிலைகளில் கரைப்பதற்கு ஏதுவாக மயில், பறவை, சிங்கம், காளை போன்றவைகள் மீது அமர்ந்திருப்பது போல உள்ள வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வெகுவாக கவர்ந்துள்ளன.
களிமண் மற்றும் இயற்கைப் பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதாகக் கைவினை கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.