திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஜெயராம் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள் ஒன்றுக்கு ஏராளமான பக்தர்களும், திரை பிரபலங்களும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ஜெயராம் அவரது மனைவி மற்றும் மகனுடன் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்திற்கு வருகை தந்த அவருக்கு லட்டு மற்றும் தீர்த்தங்கள் பிரசாதங்களாக வழங்கப்பட்டது.