கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காவல்துறை மிரட்டியதாகக் கூறி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான நைனா என்பவர் தற்கொலைக்கு முன் எழுதிய உருக்கமான கடிதம் சர்ச்சையைக் கிளப்பியது.
அதில், தனது தம்பி மனைவி சரிதா தன் மீது பொய் புகார் அளித்ததாகவும், அதன்பேரில் திருநாவலூர் காவல் ஆய்வாளரும், போலீசாரும் தன்னை மிரட்டியதால் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் நைனா கூறியிருந்தார்.
இந்தக் கடிதம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருநாவலூர் காவல் ஆய்வாளர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பதற்றம் நிலவுவதைத் தடுக்க ஏ.அத்திப்பாக்கம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.