சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் ஆலயத்தில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
ஆடித்தபசு திருவிழா கடந்த 28ம் தேதி தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில், ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தந்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனையும் செலுத்தினர்.