சென்னை ராயபுரம் அருகே அடுக்குமாடி கட்டடத்தின் திறந்தவெளி பகுதியில் தவறி விழுந்த சிறுவனைப் பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
ராயபுரம் பனைமரத்தொட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான நாகேஷ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது 8 வயது மகன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது நான்காவது அடுக்கு மாடிக் கட்டடத்தின் திறந்தவெளி பகுதியில் பந்து விழுந்துள்ளது.
இதனை எடுக்கச் சென்றபோது தவறி விழுந்த சிறுவன் வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி சிறுவனைப் பத்திரமாக மீட்டனர். பின்னர், லேசான காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.