அயர்லாந்தின் டப்ளினில் இனவெறி கும்பலொன்று தாக்கியதில் இந்தியாவைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட லக்வீர் சிங் என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக டாக்ஸி ஓட்டுநராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் லக்வீர் சிங் டாக்ஸியில் ஏறிய இளைஞர்கள், உங்கள் நாட்டுக்கே திரும்பச் செல்லுங்கள் எனக் கூறி அவரது தலையில் பாட்டில்களால் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த லக்வீர் சிங்குக்கு யாரும் உதவ முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், அயர்லாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட 3-வது தாக்குதல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.