கியா நிறுவனம் புதிய செல்டோஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை தற்போதை விட சற்று கூடுதல் நீளம் கொண்ட காராக உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது உள்ள கார் 4,365 மில்லி மீட்டர் நீளம், 1,800 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1,645 மில்லி மீட்டர் உயரத்தை கொண்டுள்ளது.
இந்த நிலையில், புதிய செல்டோஸ் மாடல் இதனை விட 100 மில்லி மீட்டர் வரை கூடுதல் நீளத்தைக் கொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.